புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக போதைப்பொருள் - பெங்களூருவில் பரபரப்பு.!
two crores worthable drugs seized in banglore
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு சொக்கனஹள்ளி என்ற பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளூக்கு ரகசிய தகவல் கிடத்தது.
அந்தத் தகவலின் பேரில், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ காஞ்சா, எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் போதைப்பொருளை பதுக்கியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தப் போதைப்பொருள் பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விற்பனைக்காக, வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
English Summary
two crores worthable drugs seized in banglore