புத்தாண்டு கொண்டாட்டம் - வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.!
devotees croud increase in vadapalani murugan temple
இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை யொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த புத்தாண்டையொட்டி கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு பின்னர் மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.
ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நண்பகல் 12 மணிக்கு வடபழனி முருகன் கோவில் நடை அடைக்கப்படாது என்று தெரிவித்ததுடன், கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
devotees croud increase in vadapalani murugan temple