அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் திருப்பம்! உச்சநீதிமன்றம் ஓடிய அதிமுக! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தாமே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கில் சில முக்கிய உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது.

அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட SIT அமைத்து வழக்கை விசாரணை செய்ய வேண்டும். FIR Leak ஆன விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் இலவச கல்வி வழங்க வேண்டும்

பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது தவறு. முதல் தகவல் அறிக்கையில்  கண்ணியத்துடன் தகவல்களை பதிவிட வேண்டும். முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர் சந்திப்புக்கு ஆணையர் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை என்பது உறுதியாகி உள்ளதால், அவர் மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்திராவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படி உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடிக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் போது ,தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் வழக்கறிஞர் தெரிவிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்! - உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் ஆர். வரலட்சுமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை" வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anna University Issue AIADMK SC High Court  case DMK Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->