ஆன்லைன் மோசடி - 3 வகையான வங்கி கணக்குகள் மூடல்.!
three type accounts closed in india reserve bank info
நாடு முழுவதும் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட மூன்று வகையான கணக்குகளை மூட வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருந்தது.
இந்த நிலையில் அந்த நடவடிக்கையை இன்று முதல் தொடங்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கி கணக்குகள் மூடப்படுகின்றன.
செயலற்ற வங்கி கணக்குகளை மோசடி நபர்கள் குறிவைப்பதால் அதனை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. பன்னிரண்டு மாதங்களாக எந்தவித பணப் பரிமாற்றமும் நடக்காத வங்கி கணக்குகளும் மூடப்படுகின்றன.
நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கி கணக்குகள் மூடப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என்று பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
three type accounts closed in india reserve bank info