ஜாலி!!! பிரபல நடிகர் பிரபாஸ் க்கு திருமண பேச்சு எடுத்தாச்சு!!! மணப்பெண் யார் தெரியுமா?
Famous actor Prabhas got married know who bride
நடிகர் 'பிரபாஸ்' தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர். இவர் பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்பு இந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

இவருக்கு 45 வயதாகியும் இன்னமும் திருமணம் ஆகவில்லை.இவர் பாகுபலி படத்தில் நடிக்கும் போது,அனுஷ்காவுடன் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது.
அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர்.இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரபாசின் மாமாவும் மறைந்த அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜுவின் மனைவி சியாமளா தேவி, இந்த திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் தற்போது தெலுங்கு ரசிகர்களிடையே பரவி வருகிறது.மேலும் பிரபாஸ் தற்போது 'ஸ்பிரிட்', 'கண்ணப்பா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Famous actor Prabhas got married know who bride