சின்னத்திரை நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


சென்னை கெருகம்பாக்கம், பாலகிருஷ்ண நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா(37). தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்ன திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனது மாமனார் சரவணவேல் தனக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து, கொலைவெறி தாக்குதல் நடத்தியாகவும், இதில் இருவரும் பலத்த காயம் அடைந்திருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் சரவணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சரவணவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father-in-law sexually harassed a small screen actress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->