பிரபல படத் தொகுப்பாளர் ஆர்.விட்டல் இன்று காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல படத் தொகுப்பாளர் ஆர்.விட்டல் இன்று காலமானார்.!

சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர் ஆர்.விட்டல். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்டோர் நடித்த ஏராளமான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், 'ஆடு புலி ஆட்டம்', 'ஜப்பானில் கல்யாணராமன்', 'படிக்காதவன்', 'முரட்டுக்காளை', 'நல்லவனுக்கு நல்லவன்', 'பாயும் புலி', 'விக்ரம்', 'ராஜா சின்ன ரோஜா' உள்ளிட்ட படங்களுக்கும் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 

அதிலும் குறிப்பாக, ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான படத்தொகுப்பாளராகவும் இவர் திகழ்ந்தார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

படத் தொகுப்பாளராகத் திகழ்ந்த விட்டல் நடிகர் ஜெய்சங்கர் நடித்த 'முடிசூடா மன்னன்', 'தொட்டதெல்லாம் பொன்னாகும்', ஏவிஎம் ராஜன் நடித்த 'வீட்டுக்கு வந்த மருமகள்' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். 

இவருடைய மனைவி, மகன் இறந்துள்ள நிலையில், மகள் சுமதியின் பராமரிப்பில் இருந்து வந்த விட்டல், இன்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய இந்த எதிர்பாராத மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

film editor R Vittal passed away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->