நான் அரசியல் பேசுவதால் பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது - நடிகர் பிரகாஷ்ராஜ்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீப காலமாக தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக மோடி மற்றும் அமித்ஷாவை சமூக வலைதளங்கள் மூலம் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் அரசியல் பேசுவதால் என்னுடன் இணைந்து நடித்தவர்கள் தற்போது ஒதுக்கி வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், 'நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிப்பதற்கு பயப்படுகின்றனர். மேலும், என்னுடன் நடித்த அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ எனும் பயம் அவர்களுக்கு இருக்கிறது. அந்த பயத்தில் தான் என்னை விட்டு விலகி செல்கின்றனர்.

இது என் சினிமா வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்டவர்களுடன் நானும் நடிக்க தயாராக இல்லை. தற்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன். என் குரலை ஒலிக்க செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன்' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Film opportunities are decreasing because I talk about politics actor Prakashraj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->