திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்! நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாகவே அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 1986ல் நடிகர் சுரேஷ், நடிகை  நதியா நடிப்பில் வெளிவந்த 'பூக்களைப் பறிக்காதீர்கள்' எனும் திரைப்படம் மூலம், மோகன் நடராஜன் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். இவருக்கு ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சொந்தமாக உள்ளது.

இவர், நடிகர் பிரபு, குஷ்பூ நடித்த 'கிழக்குக்கரை', அருண் பாண்டியன், சுகன்யா நடித்த 'கோட்டைவாசல்', சரத்குமார், கனகா நடித்த 'சாமுண்டி', பிரபு, குஷ்பூ நடித்த 'மறவன்', விஜயகாந்த், வினிதா நடித்த 'பதவி பிரமாணம்', விஜயின் 'கண்ணுக்குள் நிலவு', அஜித்தின் 'ஆழ்வார்', சூர்யாவின் 'வேல்' ரவிச்சந்திரன், ரம்யா கிருஷ்ணன் நடித்த 'சினேகா' (கன்னடம்) ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ,தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உயிரிழந்த தகவல் அறிந்த நடிகர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மேலும், தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Filmmaker Mohan Natarajan passes away Actor Surya went to pay homage in person


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->