இயக்குநர் தங்கர்பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன" அசத்தலான பர்ஸ்ட் லுக்! - Seithipunal
Seithipunal


இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்த திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்த திரைப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், 

மேலும் எஸ் ஏ சந்திரசேகர், ஆர் வி உதயகுமார், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் முதன்மையான கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளார். 

சொல்ல மறந்த கதை, அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட கலை பொக்கிஷங்களை இயக்கிய இயக்குநர் தங்கர்பச்சான், தற்போது இயக்கியுள்ள கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அருவி படத்தில் சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்திய அதிதி பாலன் இந்த படத்தில் நடித்திருப்பதால், படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

கிட்டத்தட்ட படம் வெளியாவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்று படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) வெளியிடப்பட்டுள்ளது.

இதனை நடிகர் கமலஹாசன், இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ளனர். "கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு, அதிதி பாலன் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First Look of Karumegangal Kalaiginrana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->