''கருடன்'' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூரி ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் ''கருடன்'' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்கள் பெற்றது. மேலும் இந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ''கருடன்'' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகியுள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Garudan movie OTT release update 


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->