அச்சச்சோ... நவரச நாயகன் மகனுக்கே இப்படி ஒரு கஷ்டமா.? கௌதம் கார்த்திக் பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது மகன் கௌதம் கார்த்திக். 2013 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான  கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அறிவர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த மாதம்  சிம்புவுடன் இவர் இணைந்து நடித்த பத்து தல என்ற திரைப்படம் வெளியாகி  ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது கிரிமினல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆர்யாவுடன் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார் கௌதம் கார்த்திக்.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடி தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கஷ்ட காலங்களைப் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் கௌதம் கார்த்திக்.

சிறு வயது முதலே யாரிடமும் காசு கேட்கக்கூடாது என்ற வைராக்கியத்துடன் வளர்ந்ததாக தெரிவித்த அவர் தனது திருமணத்திற்கான அத்தனை செலவுகளையும் தனது சொந்த பணத்தில் செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காலகட்டத்தில் தனது செலவிற்காக கார் பைக் ஆகியவற்றை விற்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நேரங்களில் அவரது மனைவி மஞ்சிமா மோகன் தான் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார். கொரோனா காலத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனுக்கே இவ்வளவு கஷ்டமா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gautham karthik recent interview makes fans shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->