விஜய்யின் ''கோட்'' திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
GOAT film famous company acquired television license
லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ''கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்'' (GOAT) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தின் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வருகின்ற செப்டம்பர் 5 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ''கோட்'' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் விஜய் பாடியுள்ள இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் கோட் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ''ஜீ தமிழ்'' தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்று வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
English Summary
GOAT film famous company acquired television license