எவரெஸ்ட் சிகரத்தில் தனி மலையேற்றப் பயணங்களை நிறுத்த முடிவு; நேபாள அரசு..!
Nepal government decides to stop solo trekking on Mount Everest
எவரெஸ்ட் மலையேற்ற பயணங்களுக்கு, திருத்தப்பட்ட மலையேற்ற விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எவரெஸ்ட் சிகரம் மற்றும் 8000 மீட்டர் உயரமுள்ள பிற சிகரங்களில் தனியான மலையேற்றப் பயணங்களை நிறுத்த நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மலையேற்றத்தின் போது இருவருக்கு ஒரு மலை வழிகாட்டி உடன் வருவது கட்டாயம் என்று கூறியுள்ளது. இதன் மூலம், எவரெஸ்ட் சிகரம் மற்றும் 8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட பிற மலை சிகரங்களில் தனி மலையேற்றப் பயணங்களை நேபாள அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து நேபாள அரசு மலையேற்ற பயண ஒழுங்கு முறைக்கான திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த ஆறாவது திருத்தம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
எவரெஸ்ட் சிகர பயண விதிமுறைகள்:
இனி தனியாக எவரெஸ்ட் மலையேற்றப் பயணங்கள் இல்லை.
எவரெஸ்ட் உட்பட, 8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட சிகரங்களுக்கு, ஒவ்வொரு இரண்டு ஏறுபவர்களுக்கும் ஒரு உயர ஆதரவு ஊழியர்கள் அல்லது மலை வழிகாட்டி நியமிக்கப்படுவார்கள்.
மற்ற மலைகளின் பயணங்களுக்கு, ஒரு குழுவிற்கு குறைந்தது ஒரு வழிகாட்டியாவது தேவை.
இதுகுறித்து நேபாள நாட்டின் சுற்றுலாத் துறையின் இயக்குனர் ஆரத்தி நியூபேன் கூறியதாவது:
மலையில் ஏறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டிகளை கட்டாயமாக்கியுள்ளது. மலை ஏறுதலுடன் தொடர்புடைய ஆபத்தைக் குறைக்க இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Nepal government decides to stop solo trekking on Mount Everest