'ஜனநாயகன்' படத்தை அதிக தொகைக்கு உரிமம் பெற்ற ஓடிடி தளம் எது தெரியுமா?
OTT platform licensed film Jananayakan highest amount
முன்னணி நடிகரான விஜய்யின் கடைசி படமான 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இதே போன்று வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் ரூ.78 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. அவ்வகையில், பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் மிகப்பெரிய தொகைக்கு ஜன நாயகன் படத்தின் உரிமையை கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ரூ.121 கோடிக்கு ஜன நாயகன் படத்தின் டிஜிட்டல் உரிமம் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
English Summary
OTT platform licensed film Jananayakan highest amount