தமிழகத்தில் நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!! - சென்னை வானிலை ஆய்வு மையம்
Heavy rain 5 districts Tamil Nadu day after tomorrow Chennai Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகள் இணைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, தேனி, கோவை,திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் கோவை,சேலம்,தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம் மதிய வேளையில் வெயில் தாக்கம் 35° செல்சியஸ் அளவிற்கு பதிவாகக் கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2°- 4° செல்சியஸ் வரை குறையக்கூடும்" எனத் தெரிவித்துள்ளது.
English Summary
Heavy rain 5 districts Tamil Nadu day after tomorrow Chennai Meteorological Department