மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்...மருத்துவ பரிசோதனைகளை செய்து பயடைந்த பொதுமக்கள்!
Free medical camp on MK Stalins birthday Medical tests done by the public
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பகுதியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்து பயடைந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட மாநகர தி.மு.க மருத்துவ அணி, வீரப்பன் சத்திரம் பகுதி 13, 14,16, 17,23, 24 வட்டக் கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஈரோடு அசோகபுரம் தேவி மஹாலில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் விவேக் தலைமையில் தி.மு.க மாநகர செயலாளர் சுப்பிரமணியம், வீரப்பன் சத்திரம் பகுதி செயலாளர் வி.சி.நடராஜன்ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார். மேலும் இந்த முகாமில் துணை மேயர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் முருகேசன், புனிதா சக்திவேல் மற்றும் பகுதி நிர்வாகிகள் அன்பு, குமார், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பலன் அடைந்தனர்.இந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்து பயடைந்தனர்.
English Summary
Free medical camp on MK Stalins birthday Medical tests done by the public