24 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்த கோட் படத்தின் மட்ட பாடல்.! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், 'தி கோட்'. இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

நடிகர் விஜய் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்திற்கான புரோமோசன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இதற்கிடையே கோட் படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் 4-வது பாடலான 'மட்ட' பாடலை யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்தப்பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் சுமார் 5 மில்லியன் பார்வைகளை கடந்து தற்போது யூ-டியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இது குறித்த பதிவினை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

got movie matta song reach 5 million views within 24 hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->