கவுதமியின் திருமண புகைப்படம்., வைரல்.! ஜெயலலிதா அப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!
Gowthami marriage photo viral
சினிமாவில் பல நடிகைகள் வந்து போனாலும் கூட இளம் வயதிலேயே கால்பதித்த பல நடிகைகளுக்கு எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு காலகட்டத்தில் நடிகை கௌதமியுடன் நடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டனர். தனது வசீகர தோற்றம் மூலமாக நடிகை கௌதமி பெரிய இடத்தை பிடித்தார்.
ஆனால், அவர் பதினைந்து வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் இருந்து விலகி இருக்கிறார்., என்பதை சமீபத்தில் தான் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், அடுத்த வருடமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
![பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, நடிகை கௌதமி எடுத்த அதிரடி முடிவு.! குவியும் பாராட்டு.!! - Seithipunal](https://img.seithipunal.com/media/yytvyvyty-5lrn9.jpg)
இந்த திருமணத்தில் கௌதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார். பின்னர், தனித்து வாழ்ந்து வந்த கவுதமி கமலஹாசனுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். அப்போதும், அவர் திரைப்படங்களில் நடிக்காமல் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு கௌதமி பாபநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போதும் சில திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது கவுதமியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
![](https://img.seithipunal.com/media/jayalalitha gowthami-2rmse.png)
English Summary
Gowthami marriage photo viral