இருட்டுக்கடை அல்வா! வெட்கமாக இல்லையா? CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை போட்ட டிவிட்!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin Nellai Halva
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடையில் அல்வா வாங்கி சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக தெரிவித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதனை விமர்சித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?
திமுக மக்களுக்கு கொடுத்த அல்வா வகைகள்:
*கல்விக்கடன் தள்ளுபடி
*பயிர்க்கடன் தள்ளுபடி
*5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி
*சிலிண்டர் ரூ.100 மானியம்
*டீசல் விலை ரூ.4 குறைப்பு
*மாதம் ஒருமுறை மின்கட்டணம்
*100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம்
*நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2500
*கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ. 4000
*இந்து கோவில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு
*அரசு துறைகளில் புதிதாக 2,00,000 பணியிடங்கள்
*காலியாக உள்ள 3.50.000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்
*பழைய ஓய்வூதிய திட்டம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin Nellai Halva