"கிராண்ட் பிரிக்ஸ்" விருது வென்ற கொட்டுக்காளி திரைப்படம்!...மகிழ்ச்சி வெள்ளத்தில் படக்குழு! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் பல திரைப்படங்களை தனது எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அதன்படி சூரி நடிப்பில் உருவாகிய கொட்டுக்காளி  திரைப்படத்தை  சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கிய நிலையில், இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது.


ரஷ்யாவில் நடைபெற்ற 22-வது அமுர் இலையுதிர்கால சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி' திரைப்படத்திற்கு 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், சர்வதேச மேடையில் இந்த அற்புதமான மரியாதைக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grand Prix award winning film Kotukkali


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->