கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு.. தாய் தந்தையே காரணம் என உருக்கம்..!
Honorary Doctor Degree for Actor Simbu
தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு தனது தாய் தந்தையரே காரணம் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
தங்கள் துறைகளில் மகத்தான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகின்றனர். கலைத்துறையை பொறுத்தமட்டில் சிவாஜி, எம்ஜிஆர், கமல், விக்ரம், விஜய் உள்ளிட்டோர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் நடிகர் சிம்புக்கு கலைதுறையில் மகத்தான பங்களிப்பை அளித்ததற்காக கவுரவ டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது. வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடந்த விழாவில் அதன் நிறுவனர் ஐசரி கணேஷ் சிம்புவிற்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கும் போது எனக்கு கவுரவ டாக்டர் கிடைத்ததற்கு தனது தாய் தந்தையரே காரணம் என நெகிழ்சியாக தெரிவித்தார். இதற்கிடையில், அவர் டாக்டர் பட்டம் பெறும் படங்களை பகிர்ந்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
English Summary
Honorary Doctor Degree for Actor Simbu