''ஹாட் ஸ்பாட்'' திரைப்படத்திற்கு கிடைத்த தணிக்கைச் சான்றிதழ்.! - Seithipunal
Seithipunal


விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ''ஹாட் ஸ்பாட்''. இந்த திரைப்படத்தில் கலையரசன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம், கௌரி கிஷன், அபிராமி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் ஆபாசம் நிறைந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். 

சிக்ஸர் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு ''ஏ'' சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தை 18 வயதிற்கு குறைவானவர்கள் பார்க்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hot Spot movie Censorship certificate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->