ஜீவியின் "மண்ட பத்திரம் "பாடல் எப்படி இருக்கு?
How is Jeevi's song Manda Patiram
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார்த் தனது 25 வது படமாக "கிங்ஸ்டன்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர்க் கமல் பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
![](https://img.seithipunal.com/media/gv2-nz4mg.jpg)
புதிய தயாரிப்பாளர் ஜிவி பிரகாஷ் :
ஜிவி பிரகாஷுக்கு இப்படம் மிக முக்கிய படமாக இருக்கும். ஏனென்றால் இப்படத்தை முதல் முறையாக ஜிவி பிரகாஷ் தயாரித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் திவ்யபாரதி நடித்துள்ளார்.
இதற்கு முன்பே ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து "பேச்சுலர்" என்ற படத்தில் நடித்துள்ளனர். அப்படமானது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஜீவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி :
அப்படத்தில் இடம்பெற்றுள்ள "அடியே மற்றும் பச்சிகளாம் பறவைகளாம்" என்ற பாடல்கள் பிரபல பாடல்களாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைப்போலவே 'கிங்ஸ்டன் 'படத்திலும் முதல் பாடலானா" ராசா ராசா "பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்தப் படத்தின்' ஃபர்ஸ்ட் லுக்' மற்றும் 'டீசர்' வெளியிடப்பட்டது. இப்படமானது வரும் மார்ச் 7ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
![](https://img.seithipunal.com/media/gv3-5zly5.jpg)
கிங்ஸ்டன் இரண்டாவது பாடல் :
அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான "மண்ட பத்திரம்" பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளன. மேலும் இப் பாடலைக் கானா பிரான்சிஸ் எழுதி பாடியுள்ளார். மேலும் இப்பாடலானது ஒரு குத்து கானா பாடலாக அமைந்துள்ளது.
அதைத் தொடர்ந்து .இப்பாடலில் ஜிவி பிரகாஷ் தனது வித்தியாசமான தோற்றத்தில் மக்களைக் கவரும் வண்ணம் நடனம் ஆடி இருப்பதால் இப்படத்தைக் காண மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
English Summary
How is Jeevi's song Manda Patiram