கொளுத்தும்.. வெயில்.. கோடைகாலத்தில் நமக்கு கிடைக்கும் நிறைய நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


சூரியன் தன் கதிர்க்கரங்களை நேரடியாக நீட்டும் காலம் வெயில் காலம். வெயில் என்பது இயற்கையின் பெரும் அருட்கொடையாகும். வெயிலின் உஷ்ண சக்தியை கொண்டே உலகம் இயங்குகின்றது. 

பனிக்காலம், மழைக்காலம், குளிர்க்காலம் இவைகளை விட வெயில் காலமே மிகவும் சிறந்தது.

வீட்டிலிருந்தால் கூட வெயிலின் வெம்மை வெறுப்பைத் தருகிறது. நிஜத்தில் வெயில் வெறுக்கக்கூடியதில்லை. அது வாரி வழங்கும் நன்மைகள் ஏராளம்.

மழையைப் போல வெயிலும் இயற்கையின் கொடையே. அதை புரிந்து கொள்ளாமல் நாம்தான் குடைக்குள்ளேயே குடிகொண்டிருக்கிறோம். உச்சி வெயில் உடம்புக்கு ஆகாதுதான். ஆனாலும் உச்சி வெயிலாலும் நல்ல பலன் உண்டு.

பலன்கள் :

வெயில் நம் மீது படும்போதுதான் அதன் சக்தியை கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது. 

மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும். தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றது.

பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது. நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில் காலத்திலேயே அதிக அளவு உடலை சுற்றி வருகிறது.

வெயிலின் சக்தியை கிரகித்தே மரங்கள் வளருகின்றன. மழைக்காலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது.

நீர் எந்தளவுக்கு விவசாயத்திற்கு முக்கியமோ அதே அளவு வெயிலின் உஷ்ண சக்தியும் மிகவும் அவசியமானது ஆகும்.

வியர்வை எனும் அற்புதமான உடல் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வு வெயில் காலத்திலேயே அதிகம் நிகழ்ந்து நமது ஆரோக்கியத்தை உயர்த்துகிறது. 

இந்த வியர்வையின் மூலமாக சிறுநீரகங்களின் வேலை பளுவும் குறைந்து சிறுநீரகங்கள் பலம்பெறுவதும், வெயிலினால் தான் நடைபெறுகின்றது. 

பறவைகள், விலங்குகள் :

வெயில் நம்மை வாட்டி வதைப்பதைப் போலவே பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் பாதிக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த வெயில் காலங்களில் பறவைகளுக்கு வீட்டின் கூரை மீது தண்ணீர் வைக்கலாம். விலங்குகளுக்கு வீட்டின் அருகில் நீர் அருந்த வழி செய்யலாம். பாதசாரிகளுக்கு பயண வழியில் தாகம் தணிக்கும் நீர்ப்பந்தல் அமைப்பது மனிதநேயமாகும்.

வெயிலை வெறுப்பதைவிட பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்...

வெயிலை அனுபவியுங்கள்... அத்துடன் ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்ளுங்கள்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to use summer for our body in tamil 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->