அஸ்வனி குமாரின் பார பந்துவீச்சில் அரண்டு போன கொல்கொத்தா; முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி..!
Mumbai team registered its first victory by defeating Kolkata team
2025 ஐபிஎல் தொடரில் 12 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து, கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினர். இதில் சுனில் நரைன் ரன் எடுக்காமலும், டி காக் 01 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா வீரர்கள் மும்பை அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ரஹானே 11 ரன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 26 ரன், வெங்கடேஷ் ஐயர் 3 ரன், ரிங்கு சிங் 17 ரன், இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய மனிஷ் பாண்டே 19 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து காலத்தில் இறங்கிய கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்காக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் தனது முதல் போட்டியிலேயே தனது முதல் மூன்று ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி உள்ளார்.
117 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். வில் ஜேக்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ரிக்கெல்டன் 62 ரன்கள் எடுத்தார். சூர்யா குமார் யாதவ் 27 ரன்களை எடுத்தார். இறுதியில், 12.5 ஓவரில் 121 ரன்களை எடுத்து, 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளது.
English Summary
Mumbai team registered its first victory by defeating Kolkata team