சாமி கும்பிட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; 08 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை..!
A woman had gone to worship a Sami was gang raped by 8 people
தெலுங்கானாவில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்த பெண்ணை 08 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா நாகர்னூல் மாவட்டத்தில் உர்கொண்ட பேட்டாவில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. அங்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற 30 வயது பெண் தனது உறவினருடன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவில் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சாமி தரிசனத்திற்குப் பிறகு, குறித்த பெண் மற்றும் உறவினர்கள் உள்பட அவர்கள் கோயிலிலேயே தங்க முடிவு செய்து தங்கியுள்ளனர். அப்போது, நள்ளிரவில், அந்தப் பெண் கோயிலுக்கு அருகிலுள்ள புதர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
08 மர்ம நபர்கள் அந்த பெண்ணை புதர்களுக்குள் இழுத் சென்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு உறவினர் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றபோது, அவர் தாக்கப்பட்டு ஒரு மரத்தில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நபர்கள் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு, உர்கொண்டா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
A woman had gone to worship a Sami was gang raped by 8 people