IPL 2025: மீண்டும் உடற்தகுதி பரிசோதனைக்கு சென்றுள்ள சஞ்சு சாம்சன்; அடுத்த போட்டிகளில் விளையாடுவாரா மாட்டாரா..?
PL 2025 Sanju Samson has gone for fitness test again
ஐபிஎல் தொடரில் 11-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 06 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த உடனே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். இதனால், அவர் தனது காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு விளையாட அவர் தனது பேட்டிங் உடற்தகுதி நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக நடந்து முடிந்த 03 லீக் போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ள சஞ்சு சாம்சன் தேர்ச்சியடையும் பட்சத்தில், அவரும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார். அத்துடன், அணியின் விக்கெட் கீப்பராகவும் செயல்பட வாய்ப்பு உள்ளது. முடியாத பட்சத்தில் தொடரில் இருந்து விலகுவாரா என்ற கேள்வியுள் எழுந்துள்ளது. இதன் காரணமாக பரிசோதனை முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
English Summary
PL 2025 Sanju Samson has gone for fitness test again