"லவ்க்காக ஏங்கிய போது.. அது நடந்தது." நடிகர் கார்த்தியின் கல கல பேச்சு.! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி உலகமெங்கும் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகமே மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகும் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் மற்றும் திரை துறையினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை மும்பை டெல்லி ஹைதராபாத் பெங்களூர்  திருச்சி ஆகிய நகரங்களுக்கு சென்று  இப்படத்தினை ப்ரொபோஸ் செய்ய இருக்கிறது படக்குழு. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கில் வைத்து பொன்னியின் செல்வன் ஆந்தம் லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் நடிகர் கார்த்தி மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் கார்த்தி படித்தது ஆண்கள் பள்ளியில் தான் படித்ததாகவும் கல்லூரி காலங்களிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்பதால்  பெண்கள் யாருமே இல்லை என்று கவலையுடன் தெரிவித்தார். நான் எப்போது தான் லவ் பண்ண போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வந்திய தேவன் கதாபாத்திரம் தனக்கு அமைந்ததாக கூறினார். நான் மகான் அல்ல படத்தில் வரும் கதாபாத்திரத்தை போலவே  மிகவும் ஜாலியான ஆள் என குறிப்பிட்டார் கார்த்தி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I got the role of vanthiya Devan when I was wondering if this would happen to all of us Actor Karthi Excited Interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->