அப்படியா!!! RRR படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் வெற்றிக்காக உணர்ச்சிவசப்பட்டேன்!!! - தீபிகா படுகோன்
I was emotional about Oscar win song from movie RRR Deepika Padukone
பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படங்கள் இந்தியாவில் இருந்தபோதும், விருது பட்டியலில் இந்தியா பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,"இந்தியா பலமுறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. அதேபோல் அதற்கு தகுதியான பல திரைப்படங்கள் நிராகரிக்கப்படுள்ளன.
மேலும் ஆஸ்கர் விருது ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு அறிவிக்கப்பட்டபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
நான் ஒரு இந்தியன் என்பதை தவிர எனக்கும் அந்தத் திரைப்படத்திற்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆனால் அது எனக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய தருணம்' எனத் தெரிவித்தார்.இது தற்போது தீபிகா படுகோன் ரசிகர்கள் பலரால் பரவி வருகிறது.
English Summary
I was emotional about Oscar win song from movie RRR Deepika Padukone