2026-இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும்; இ.பி.ஸ்-ஐ சந்தித்த பின் அமித்ஷா பதிவு; அப்போ கூட்டணி உறுதியானதா?
NDA government will be formed in Tamil Nadu in 2026 Amit Shah registers after meeting EPS
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்தார். அவருடன் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உற்பட சிலரும் சென்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறியிருந்தனர். டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமி அங்கு புதிதாக கட்டப்பட்டு காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் இன்று இரவு 08 மணியளவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஆயத்தமாகிறாரா என அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்த நிலையில் அமித்ஷா எக்ஸ் தளத்தில் இந்தி மற்றும் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் 2026-இல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மதுவெள்ளம், ஊழல் புயல் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்-ஷா உடனான சந்திப்பு 02 மணி நேரம் நீடித்தமை குறித்து தமிழக அரசியல் காலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
NDA government will be formed in Tamil Nadu in 2026 Amit Shah registers after meeting EPS