நான் துடைப்பத்தை எடுத்து அடிப்பேன்!....விஷால் மீது நடிகை ராதிகா காட்டம்! - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் குழு,  சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல்  புகார்கள் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ராதிகா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திரைத்துறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியிருப்பது முறையான பதில் அல்ல என்றும், இது ஒரு தலைவர் பேசும் பேச்சு கிடையாது என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகைகள் குறித்து யூடியூபர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியிருப்பதை பார்த்ததாக தெரிவித்த அவர், விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு நானும் வருகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க பெரிய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல்துறை அல்லது நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டால் தான், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் வரும் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will take the broom and beat it Actress Radhika Kattam on Vishal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->