Surprise வேணும்னா scroll title வர பாருங்க....!!! - பிருத்விராஜ்
If you want a surprise just scroll down and watch the title come Prithviraj
மோகன்லால் நடிப்பில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் 2 ம் பாகம் உருவாகியுள்ளது.லூசிபர் 2 ம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார்.இதில் பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் மை ஷோ செயலியில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிருத்விராஜ் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர்கூறியதாவது, " எம்புரான் திரைப்பட ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பெரும்பாலான பணத்தை படத்தின் உருவாகத்திற்கு மட்டுமே செலவு செய்துள்ளோம். இப்படத்திற்கு மோகன்லால் சம்பளமாக ஒரு ரூபாய் கூட பெறவில்லை.
மற்ற திரைப்படங்களைப் போல் 80 % பணத்தை படக்குழுவின் சம்பளத்திற்கும் 20 % பணத்தை ப்ரொடக்ஷன் செலவுகளில் ஈடுப்படும் திரைப்படம் இது இல்லை.அதேப்போல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுக்கோள் படத்தின் இறுதி வரை பாருங்கள். படத்தின் எண்ட் கார்ட் டைட்டிலுக்கு பிறகு பாகம் 3-க்கான ஒரு முன்னோட்டத்தை வைத்துள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.மேலும் இப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
English Summary
If you want a surprise just scroll down and watch the title come Prithviraj