வில்லங்கமான லிரிக்ஸ்... மாற்றச் சொன்ன பின்னணி பாடகி... ஸ்டுடியோவிற்கு அழைத்து திட்டிய இளையராஜா! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சிறந்த பின்னணி பாடகியாக 40 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வருபவர் சித்ரா. இவர் சின்னக்குயில் சித்ரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவார் . இளையராஜாவின் தொடங்கி தேவா, ஏ. ஆர் ரகுமான், பரத்வாஜ், வித்யாசாகர் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட 25,000 அதிகமான பாடல்களை பாடியுள்ளார் . ஆறு தேசிய விருதுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர். இன்றும் பின்னணி பாடிவரும் இவர் இளையராஜா ஸ்டூடியோவில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி விளக்கி கூறியிருக்கிறார்.

 தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் பாடுவதற்காக அவரது ஸ்டூடியோ விற்கு சென்றுள்ளார். இந்தப் பாடலை எஸ்பிபியும் பாட இருந்தார். அந்தப் பாடலில் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் எஸ்பிபி பாட முடியாது என சொல்லி விட்டு கிளம்பி விட்டாராம். ஆனால் சித்ராவால் அப்படி கூறி விட்டு செல்ல இயலவில்லை. இதனால் அந்த ஒரு வரியை மட்டும் மாற்றித் தருமாறு தேவாவிடம் கேட்டிருக்கிறார். அவரும் பின்னால் இந்த பாடலை பார்த்துக் கொள்ளலாம் இப்போது சென்று வாருங்கள் என சொல்லிவிட்டாராம்.

இதன் பிறகு இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு பின்னணி பாடச் சென்றபோது இவரை அழைத்த இளையராஜ் லிரிக்ஸை  மாற்ற ஏன் சொன்னாய்? அது உன் வேலை இல்லை. இந்த கவிஞரும் வேண்டுமென்று அது போன்ற வரிகளை வைத்து பாடல் எழுத மாட்டார்கள் . கதைக்குத் தேவையான இடத்தில் அது போன்ற வரிகள் தேவைப்படும் என்பதால் எழுதி இருப்பார்கள். உன் வேலை பாடுவது மட்டும் தான் என சித்ராவிடம் கண்டிப்பாக. இது நடந்து பல வருடங்களுக்கு பிறகு தற்போது சித்ரா ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்திருக்கிறார். இளையராஜா ரசிகர்களிடம் இந்த செய்தி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ilayaraja called the playback singer to the studio and scolded ger for changing the wild lyrics


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->