46 வருஷமா நான் எழுதிய நோட்ஸ் காணவில்லை - இளையராஜா அதிர்ச்சி தகவல்
Ilayaraja Music notes missing
46 வருஷமாக தான் இசை அமைத்துள்ள படங்களின் சில இசை குறிப்புகள் காணாமல் போனதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
பொன்னியன் செல்வன் நாவலில் இடம் பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரத்திற்கும் தனது ஓவியம் மூலம் உயிர் கொடுத்தவர் மறைந்த ஓவியர் மணியம்.
இந்த ஆண்டு இவரது நூற்றாண்டு விழா கொண்டாடபட்டு வருகிறது. சென்னையில் அவர் வரைந்த ஓவிய கண்காட்சி தொடங்கியுள்ளது.
இவ்விழாவில் இளையராஜா, சிவகுமார் மணியமின் மகன், மணியம் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இளையராஜா பேசுகையில் , மணியமின் ஓவியம் குறித்து சிலாகித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக மேலும் அவர் பேசுகையில், எனது முதல் படமான அன்னக்கிளியில் இருந்து இப்போது வரை 46 வருஷமாக இசை அமைத்துள்ள படங்களில் நான் எழுதிய நோட்ஸ் எல்லாம் சேகரிப்பதற்காக தேடியபோது பல படங்களின் இசை குறிப்பு காணவில்லை என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவற்றை திருடிட்டு போனாங்களா, காப்பி அடிக்க எடுத்துட்டு போனாங்களா என்றும் தெரியவில்லை என்று கூறியது அரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் , "ஓவியர் மாதிரி தான் நானும் கோடு போடுறேன். அது எப்படி உங்க மனச தொடும். இது என்ன மாயம். அது இன்னும் அப்படியே நடந்துகிட்டு வருது. எனக்கும் தெரியாது. அந்த தருணத்தில் பேனாவை எடுத்து எழுத தொடங்கும் போது, தானாக வருது. சரியாக நான் எழுதி முடிக்கும் போது, ரீலில் அந்த காட்சிகள் முடிஞ்சிருக்கும்". என்று கூறினார்.
English Summary
Ilayaraja Music notes missing