பாவத்த... சரத்குமார் வாழ்க்கையில இப்படிலாம் துயரமா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சரத்குமார். ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாகவும் இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்து வந்த இவர் சூரியன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் மிகவும் அறியப்பட்டவர். நாட்டாமை சூரிய வம்சம் என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து  இன்று வரும் இளம் கதாநாயகர்களுக்கும் கடும் போட்டியை கொடுக்கும் வகையில் ஃபிட்டாக இருக்கக்கூடிய ஒரு ஹீரோ.

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றில் பெரிய பழுவேட்டறையர் கதாபாத்திரத்தில்  உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரது நடிப்பில்  மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த சூரிய வம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க  தற்போது தயாராகி வருகிறார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சரத்குமார் "நான் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் என்னுள் ஏராளமான கஷ்டங்கள் புதைந்திருக்கின்றன எனக் கூறியிருக்கிறார். மேலும் சூரிய வம்சம்  திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை விவாதங்கள் கடந்த ஆறு மாதமாக நடைபெற்று வருவதாகவும்  கதை உறுதியானதும் படப்பிடிப்பு தொடங்கப்படும்" எனவும் தெரிவித்தார்.

36 மணி நேரம் தூங்காமல் இன்னும் கடினமான உழைப்பை சினிமாவிற்காக கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார் அவர். இந்தக் கடின உழைப்பு தான் தனது வெற்றிக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

im smiling outside but a lot of un healed pain in me sarath kumar open interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->