சுதந்திர தினம் எதிரொலி : அமரன் படக்குழுவின் அடுத்த UPDATE என்ன?  - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த படமானது மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இன்று சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்றை அமரன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Independence Day Echo What is the next UPDATE of Amaran Film Team


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->