ரீ ரிலீசாகும் ''இந்தியன்'' திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


கமலஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ''இந்தியன்''. இந்த திரைப்படத்தில் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். 

இந்த திரைப்படத்தில் கமலுடன் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். 

திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தியன் முதல் பாகத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 7 ஆம் தேதி மறு வெளியீடு செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் ஏ. எம். ரத்தினம் போஸ்டர் ஒன்று வெளியிட்டு அறிவித்துள்ளார். 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian movie rerelease update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->