டி.டி.எஃப் வாசனுடன் ஜோடி சேரும் க்யூட்டி ஸ்டார் அமலா ஷாஜி!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். டிடிஎஃப் வாசனின் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் அதிவேகமாக பைக் ஓட்டுவது, சினிமா படங்களில் வருவது போல ஸ்டண்ட் செய்து யூட்யூபில் வீடியோக்களை பதிவிட்டு 27 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை பெற்றுள்ளார். இவரது வீடியோக்கள் பைக் டிரைவிங் விரும்பும் 2K கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவை. 

இவர் பிரபல யூட்யூபர் ஜி.பி முத்து, ரவீனா தாஹா ஆகியோரை பைக்கில் அமர வைத்து அதி வேகமாக பைக் ஓட்டி அவர்களை கதிகலங்க வைத்தவர். மேலும் டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதி வேகமாக பைக் இயக்குவதாக பல புகார்களில் சிக்கி அபராதம் கட்டுவதையும் தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.

பல பிரச்சனைகள் தன்னை சூழ்ந்தாலும், அனைத்தையும் சமாளித்து வரும் டிடிஎஃப் வாசன், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளான ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் இயக்குனர் செல்ஆம் இயக்கத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் படத்திற்கு "மஞ்சள் வீரன்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கின் பின்னணியில் அய்யனார் சிலை அமைந்துள்ளதால் கிராமத்தை தழுவிய படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பர்ஸ்ட் லுக் வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் மஞ்சள் வீரன் படம் குறித்தான அப்டேட் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு ஜோடியாக மஞ்சள் வீரன் திரைப்படத்தில் பிரபல யூடியூபர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2K கிட்ஸ் மத்தியில் தனது நடிப்பு திறமையால் பிரபலமான க்யூட்டி ஸ்டார் அமலா ஷாஜி மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info that amalashaji to pair up with TTF Vasan in manjal veeran movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->