மாதவன்- சித்தார்த் - நயன்தாரா! 'டெஸ்ட்' படத்தின் மூலம் இறுதிச்சுற்று தயாரிப்பாளரின் புது முயற்சி! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா போன்ற சிறந்த கதையம்சம் கொண்ட வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்தவர் ஒய் நாட் ப்ரொடக்ஷன்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த். இவர் தற்போது  ஒரு திரைப்படத்தை அவரே தயாரித்து இயக்க இருக்கிறார்.

பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில்  வித்தகரான சசிகாந்த் டெஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்தத் திரைப்படம் அவரது 23 வது தயாரிப்பாகும் .

கடந்த 13 ஆண்டுகளாக தயாரிப்பாளராக இருந்து வந்த சசிகாந்த்  இயக்குனராக  அறிமுகமாகும் டெஸ்ட் திரைப்படத்தில்  மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். கட்டிட வடிவமைப்பு கலைஞராகயிருந்து தயாரிப்பாளராகி  தற்போது தனது முதல் படத்தையும் இயக்க இருக்கிறார் சசிகாந்த்.

 இதுகுறித்து பேசியிருக்கும் படத்தின்  கதாநாயகர்களில் ஒருவரான மாதவன் "சசிகாந்த் கட்டிடக்கலை வடிவமைப்பாளராக இருந்து தயாரிப்பாளராகி தற்போது  இயக்குனராக அறிமுகம் ஆவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார். இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து பணியாற்றுவது  மகிழ்ச்சியான அனுபவம் என தெரிவித்தார் மாதவன். மேலும் இந்த திரைப்படம் மிகவும் சிறந்த ஒரு திரைப்படமாக வரும் எனவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iruthi sutru producer is going to direct madhavan siddharth and nayantara new update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->