பொது இடத்தில் ரன்வீரை அவமதித்த மனைவி தீபிகா.! கடுப்பாகி ரன்வீர் செய்த செயல்.! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நட்சத்திர திரை ஜோடிகளில், முக்கியமானவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. 2012 ஆம் ஆண்டு முதல் காதலிக்க துவங்கிய இந்த ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரம்மாண்டமான திருமண நிகழ்வில்  ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தங்களது நடிப்பு கேரியரில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது தீபிகா படுகோனே, ஷாருக்கானுடன் இணைந்து நடித்த பதான் என்ற திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து  மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில்  சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருந்தார் தீபிகா படுகோனே.

கிராஸ் கன்சல்டிங் என்ற நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான சமூக வலைதள இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ரன்வீர் சிங் முதல்  இடத்தை பெற்றிருக்கிறார். இந்திய  கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி  இந்தப் பட்டியலில் தொடர்ந்து 5 வருடங்கள் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா மற்றும் ரன்வீர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சிவப்பு கம்பள வரவேற்பின் போது  தீபிகாவின் கைகளை பிடிக்க முன்றார் ரன்வீர். ஆனால் தீபிகா கைகளை கொடுக்கவில்லை மேலும் அவர் ரன்வீர் சிங்கின் முகத்தை கூட பார்க்கவில்லை. 

இதனால் கடுப்பான ரன்வீர் சிங் வேகமாக நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கிடையே மனமுறிவு ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்களா? என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

is deepika and ranveer singh going to get divorce rift between them in a party


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->