இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பதிவு: அரபு நடிகை கைது!
Israel Hamas war Arab actress arrested
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அரபு நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் அவரை இஸ்ரேல் அரசு கைது செய்துள்ளது.
இஸ்ரேல் அரசு அரபு நடிகைக்கு, சமூக வலைதளத்தில் தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாகவும் தெரிவித்து சிறை தண்டனை விதித்துள்ளது.
அரபு நடிகை அப்தெல் ஹாடி என்பவர் வடக்கு இஸ்ரேல் பகுதியில் வசித்து வருகிறார். அந்த நாட்டு திரை துறையில் வளர்ந்து வரும் நடிகையான இவர் இஸ்ரேல் போர் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் எல்லை பகுதிகளை தாக்குதல் நடத்தியதால் 1400 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அரசு குறிப்பிடுகிறது.
அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த தாக்குதல் குறித்து பதிவிட்டு இருந்த நடிகை அப்துல், இஸ்ரேல் காசா எல்லையில் இருக்கும் புல்டோசர் படத்தை பகிர்ந்து பெர்லின் மாடலில் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு மெர்லின் சுவர் ஜெர்மனியால் தகர்க்கப்பட்டதால் இது ஹமாஸ் படையினருக்கு ஆதரவான பதிவாக கருதப்படுகிறது.
இதனால் இஸ்ரேல் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இஸ்ரேலை சேர்ந்த அரபு பாடகர் ஒருவர் சமூக வலைதள பதிவுக்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Israel Hamas war Arab actress arrested