கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று ஆசிரியர்கள் கைது!
Krishnagiri school girl harassment teachers arrested
கிருஷ்ணகிரி அருகே மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த வருடம் கிருஷ்ணகிரியில் என்சிசி முகாம் நடத்துவதாக கூறி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவியை மூன்று ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மாணவி அளித்த புகாரின் பேரில் ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு இடையே கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்வதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் படிக்க கூடிய மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
English Summary
Krishnagiri school girl harassment teachers arrested