அன்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றார்கள்..இன்று பத்மஸ்ரீ' விருதுக்கு சொந்தக்காரர்..யார் இந்த  முதியவர் தெரியுமா?  - Seithipunal
Seithipunal


 மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர்  இன்று பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்தியுள்ளார், அப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் இன்று மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.

யார் இந்த முதியவர் தெரியுமா?அவரது கதையை தற்போது பார்க்கலாம்.தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர் தாரிப்பள்ளி_ராமையா.70 வயதான இவர் காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொள்வார் ராமையா. பின்னர் சைக்கிள் முழுவதும் #விதைகளும்_மரக்கன்றுகளும் நிறைந்து காணப்படும். சைக்கிள் போய்கொண்டே இருக்கும். மரங்கள் இல்லாத தரிசு நிலத்தைக் கண்டால் மட்டுமே சைக்கிள் நின்று விடும். 

பின்னர் ராமையா அங்கே சில நாட்கள் முகாமிடுவார்.மேலும்  கிராமத்தை, தனது மனைவியைக் கூட மறந்து விடுவார்.அதுமட்டுமல்லாமல்  கையோடு கொண்டு வந்த, மரக்கன்றுகளை குழி தோண்டி நடுவார்.அப்போது  பல கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளிலேயே சென்று அந்த மரக்கன்றுகளுக்காக தண்ணீர் கொண்டு வருவார். அந்த மரக்கன்றுகள் தானாக வளரத் தொடங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு ராமையா நகர்வார். 

இப்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒருகோடிமரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ராமையா. அதாவது தெலுங்கானாவில் மூன்றில் ஒருவருக்காக ராமையா மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்றால் அது மிகப்பெரிய சாதனைதான் என்று கூறலாம்.வயதான காலத்திலும் இவரது சமூக சேவை அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது என்று சொல்லலாம்.  

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர்  இன்று பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்தியுள்ளார், அப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் இன்று மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They said he was mentally ill that day. Today he is a Padma Shri awardee. Do you know who this old man is?


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->