வாரிசு இசை விழா.. விஜயின் உடையையும், ஹேர்ஸ்டைலையும் விமர்சித்த இசையமைப்பாளர்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு பட இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. வழக்கமாக அவர் தனது பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கோட் சூட் என்று டிப் டாப்பான உடைகளில் கலந்து கொள்வது வழக்கம். 

இருப்பினும், வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் சாதாரணமான உடையில் கலந்து கொண்டார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இதுகுறித்து பிரபல தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். அந்த பதிவில் அவர், "வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அவரைப் பார்த்த உடனேயே அவரது தோற்றம் மனதில் நெருடலை ஏற்படுத்தியது. தனது தலை முடியையும், தாடியையும் இன்னும் கொஞ்சம் சீராக வைத்துக் கொண்டு பிரம்மாண்ட மேடைக்கேற்ற உடையை அவர் அணிந்திருக்கலாம். 

இப்படி ஏனோதானோ என்று வருவது எளிமை என்று அவரது ரசிகர்களும், அவரும் கூறிக் கொள்ளலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

James Vasanthan about Vijay Dress In varisu audio launch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->