'விட்டத தொட்டுதேன ஆகணும்... Bad boy' !!! 10 மில்லியன் views கடந்த 'குட் பேட் அக்லி' ட்ரெய்லர்....
Good Bad Ugly trailer crosses 10 million views
தமிழ் திரையுலக முன்னணி நடிகர் 'அஜித் குமார்' மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் குமாருடன் ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ்,பிரபு, சிம்ரன் , யோகிபாபு , பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.
அதிவிரைவாக 1 கோடி பார்வைகளை கடந்த குட் பேட் அக்லி டிரெய்லர் தற்போது வரை யூடியூப் தலத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இதுவரை வேறு எந்த படத்திற்கும் இவ்வளவு வியூஸ் போனதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Good Bad Ugly trailer crosses 10 million views