நடிகர் 'சஹானா ஸ்ரீதர்' மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்..!
Actor Sahana Sridhar dies of a heart attack
சின்னத்திரை நடிகர் 'சஹானா ஸ்ரீதர்' (62). மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவர் 'அழியாத கோலங்கள்', 'வி.ஐ.பி.', 'ராஜ வம்சம்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் 'வள்ளி வேலன்', 'தாமரை', 'சித்தி-2' உள்ளிட்ட பல தொடர்களில் இவர் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 'சஹானா' என்ற தொடரில் நடித்து பிரபலம் அடைந்ததால் அவர் 'சஹானா' ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த 'சஹானா' ஸ்ரீதருக்கு மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். இவரது மறைவு தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Actor Sahana Sridhar dies of a heart attack