அதள பாதாளத்துக்கு சென்ற ஐதராபாத் அணி; குஜராத் அணி அபார வெற்றி..!
Gujarat won the match by defeating Hyderabad
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்று ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணி கள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 08 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மாத்திரம் எடுத்தது. அணியின்ஜ் சார்ப்பாங்க நிதிஷ்குமார் ரெட்டி 31 ரன்னும், கிளாசன் 27 ரன்னும், கம்மின்ஸ் 22 ரன்னும் எடுத்தனர். குஜராத் அணி சார்பில் சிராஜ் 04 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 154 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 03 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஐ.பி.எல் நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 04-வது தோல்வியடைந்துள்ளது.
English Summary
Gujarat won the match by defeating Hyderabad