தமன்னாவின் "ஒடேலா 02" படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியீடு..!
The trailer release date of Tamannaah Odela 02 has been announced
தமிழ், தெலுங்கு, இந்தி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை தமன்னா. சமீபத்தில் தமன்னாவின் 'பப்ளி பவுன்சர்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.
தற்போது இவர், 'ஒடேலா 2' படத்தில் நடித்து வருகிறார். இது கடந்த 2022-ஆம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான 'ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்' படத்தின் 02-ஆம் பாகமாகும். இந்த பாகத்தையும் முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜாவே இயக்குகிறார்.

இந்த படத்தில், ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா, நாக மகேஷ், வம்சி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'காந்தாரா' புகழ் அஜனேஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், 'ஒடேலா 2' படத்தின் டீசர் உத்திர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவின் சிறப்பு இடத்திலிருந்து வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 'ஒடேலா 2' படத்தின் டிரெய்லர் நிகழ்ச்சி வரும் 08-ஆம் தேதி மாலை 03 மணிக்கு மும்பையில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
The trailer release date of Tamannaah Odela 02 has been announced