தெலங்கானா அரசுக்கு ராஷ்மிகா கடும் கண்டனம்; அரசியல், சினிமா வட்டாரத்தில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ஐதராபாத் பல்கலைக்கழக வளாக அருகில் காஞ்சா கச்சிபவுலியில் இருக்கும் 400 ஏக்கர் நிலத்தை தெலங்கானா அரசு மறுசீரமைப்பு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது.  இதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் இருக்கும் 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்தில், ஐடி பூங்கா ஒன்றை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இது மாநிலத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்றும் மற்றும் அந்த நிலத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அம்மாநில அரசு பதிலளித்துள்ளது.

இருப்பினும், கடந்த மார்ச் 30-ஆம் தேதி மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புல்டோசர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் அப்பகுதிக்குள் கொண்டு வரப்பட்து. அதற்கு பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதையடுத்து, அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டு, மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கடும் கண்டனம் தெரிவித்தது. தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விஷயத்தை இப்போதுதான் நான் பார்த்தேன். மனம் உடைந்துவிட்டது. இது சரியில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன், உடைந்த இதயம் ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rashmika strongly condemns the Telangana government


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->